Thothiram Pathirane Deva

தமிழ்

தோத்திரம் பாத்திரனே தேவா தோத்திரந் துதியுமக்கே நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய் நித்தியம் துதியுமக்கே சத்துரு பயங்களின்றி -நல்ல நித்திரை செய்ய எமை பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே சுற்றிலுங் கோட்டையானாய் விடிந்திருள் ஏகும்வரை -கண்ணின் விழிகளை மூடாமல் துடி கொள் தாய்போல் படிமிசை எமது துணை எனக் காத்தவனே காரிருள் அகன்றிடவே -நல்ல கதிரொளி திகழ்ந்திடவே பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன பாங்கு சீராக்கி வைத்தாய் இன்றைத் தினமிதிலும் -தொழில் எந்தெந்த வகைகளிலும் உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள் ஊன்றியே காத்துக் கொள்வாய்