Thukkam Kondada Vaarum

தமிழ்

துக்கம் கொண்டாட வாருமே பாரும்! நம் மீட்பர் மரித்தார் திகில் கலக்கம் கொள்ளுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர் யூதர் நிந்தித்தும் மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். 3.கை காலை ஆணி பீறிற்றே தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே; இயேசு சிலுவையில் மாண்டார். 4.மும்மணி நேரம் மாந்தர்க்காய் தம் மெளனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே இயேசு சிலுவையில் மாண்டார். 5.சிலுவையண்டை வந்துசேர் நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்; ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்; இயேசு சிலுவையில் மாண்டார். 6.உருகும் நெஞ்சும் கண்ணீரும் உள்ளன்பும் தாரும் இயேசுவே; மாந்தர்மீதன்பு கூர்ந்ததால் நீர் சிலுவையில் மாண்டீரே!