Thuthiye Thuthiye

தமிழ்

துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே (2) 1.தூத கணங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும் வேத முதல்வனும் நீர் - துதி 2.அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் - துதி 3.பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத் தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் 4.அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுதந்தர ஒளியை சுடரிடச் செய்ய வந்த குமாரனும் நீர்- துதி 5.மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும் ஆட் கொண்ட நாதனும் நீர் - துதி 6.கர்த்தாதி கர்த்தனே இராஜாதி இராஜனே நித்தியமான எம் தேவாதி தேவேதுத்தியம் செய்திடுவோம் – துதி