Ullam Anantha Geethathile

தமிழ்

உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாரங்கள் சுமந்தவரே - உள்ளம் 2. மலை போன்ற தோர் சோதனையில் மகிபன் அவர் கைவிடாரே கல்வாரியின் அன்பினிலே கனிவோடுன்னை அணைத்திடுவார் - உள்ளம் 3. உலகம் முடியும் வரைக்கும் உந்தனோடிருப்பேன் என்றவர் வாக்கு மாறிடா நேசரையே நம்பிடுவாய் துணை அவரே - உள்ளம்