Um Saarbinil Nadathum

தமிழ்

உம் சார்பினில் நடத்தும் தந்தையே; உம் துணையின்றி தவறுவோமே சந்தேகம் சூழும் துக்கம் மிஞ்சிடும்; மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும். 2. சத்தியத்தில் நடத்தும் தந்தையே; உம் துணையின்றி கேடு சூழுமே; வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும் சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும். 3. சன்மார்க்கத்தில் நடத்தும் தந்தையே; உம் துணையின்றி வழி காணோமே; கார்மேகம் மூடி இருள் சூழுவோம் உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம். 4. விண் ஓய்வுக்கு நடத்தும் தந்தையே; காடு மேடான பாதை என்றுமே உம் சித்தம்போலே துன்பம் இன்பமும் தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.