Um sirugugal

தமிழ்

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு இறைவா -- (2) அந்த இருளிலும் ஒளி சுடரும் வெண் தணலிலும் மனம் குளிரும் -- (2) உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும் என்னை காத்திடு என் இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உம் மன்னிப்பில் பனி போல் கரையும் கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் -- (உம் சிறகுகள்... வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகை வானதன் அருள் மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை -- (உம் சிறகுகள்...)