தமிழ்
உம்மை ராஜா விசுவாச
பக்தியாய்ப் பணிகிறேன்
தாழ்மையோடும் கண்ணீரோடும்
தேவரீரை அண்டினேன்
நீர் மண்ணான பாண்டமான
என்னை அன்பாய்ப் பாருமேன்.
2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த
அருள் செய்யும் கர்த்தரே;
என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட
மேய்ப்பரான உம்மையே
சேர்வேனாக நீர் அன்பாக
என்னைப் பாரும் இயேசுவே.
3. தயவோடே நீர் உம்மோடே
ஐக்கியமாம் எல்லாருக்கும்
ஈவதான இன்பமான
அருள் என்மேல் வரவும்;
யாவும் நீரே தேவரீரே
என்னைப் பார்த்து ரட்சியும்.
4. ஆ என் ஞானப் பொழுதான
தெய்வ ஆட்டுக்குட்டியே
எனதாவி உம்மைத் தாவி
தேடும் மணவாளனே;
பட்சத்தோடும் தயவோடும்
என்னைப் பாரும் மீட்பரே.
5. ஏங்கலோடும் பணிவோடும்
என்னுடைய ஆத்துமம்
வாயும் நெஞ்சும் கூவிக் கெஞ்சும்
சத்தம் கேட்டென் சஞ்சலம்
தீர்ப்பீராக; நீர் அன்பாக
என்னைப் பார்த்தால் பாக்கியம்.
6. உலகத்துப் பொய்ச் சம்பத்து
மாயையும் சிங்காரமும்
ஆன நல்ல செல்வம் அல்ல
நெஞ்சை அவை வாதிக்கும்;
மெய் வாழ்வான நீர் அன்பான
பார்வை தந்து ரட்சியும்.