தமிழ்
உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் மிக அதிசயமானதே
உம்மைத் துதிப்பேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே
1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்
2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவு ஆச்சரியமானதே
4. என்னை சோதித்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்ய வழியிலே என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட