தமிழ்
உம்மால் அன்றி என்னால் ஆகும்
என்று சொல்ல ஒன்றும் இல்லை
கொடியானது என்றும் தனியே
கனிதராது
என்று சொன்னீரே
செடியே உம்மில்
நிலைத்திருந்து
நான் கனிகள்
தந்து என் வாழ்வை முடிப்பேன் (2)
2.பெலனுமல்ல பராக்கிரமும் அல்ல
உமதாவியால் தான் ஆகணும் தேவா
இரங்கும் தேவா உம்மால் அன்றி
எங்கள் விருப்பமும் ஓட்டமும் வீணே
சிறுவன் கை ஐந்தப்பம்
இரு மீன்கள் உண்டு
எடுத்தாசீர்வதித்து
அளித்திடும் தேவா (2)
யுத்தம் எனதல்ல கர்த்தரின் யுத்தம் உம்மால் இன்று நான்
பார்த்திடச் செய்யும் சத்துரு வெள்ளம் போல்
எழும்பிடும் வேளை கர்த்தரின் ஆவியால்
கொடியேற்றுவீரே எங்கள் நாமூலம் பேசும்
இயேசுவே எங்களை ஆவியால்
நிறைத்திடும் ஆமென் (2)