Vaa Paavi Ilaippara Vaa

தமிழ்

வா பாவி இளைப்பாற வா என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன்; என் பாரம் நீங்கி இயேசுவால் சந்தோஷமாயினேன். 2. வா பாவி தாகந்தீர வா தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன் என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. வா பாவி இருள் நீங்க வா; நான் லோக ஜோதியே உன் நெஞ்சில் ஒளி வீசுவேன் என்றார் என் நேசரே; மெய்ஞான அருணோதயம் அவ்வாறு நான் கண்டேன் அஜ்ஜோதியில் சந்தோஷமாய் நான் என்றும் ஜீவிப்பேன்.