Vanthaalum yesuve

தமிழ்

வந்தாளும் யேசுவே வாருமிதில் மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில் பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோர்வே இத்தினத்தில் இங்கு வந்திடும் ... தேவா நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பையின்று கர்த்தரே நீர் காட்டி நற்குணம் அவர்க்கு நல்கிடும் ... தேவா - சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புதியதாக யுத்தம் செய்திட ... தேவா என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்திரம் பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன் என் ற வா இந்நேரம் வாருமே ... தேவா சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர் ஆதலானந்த ஸ்தோத்திரம் ... தேவா