Varum Ayya Pothagare

தமிழ்

1. வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும் சேரும் ஐயா பந்தியினில் சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சே உத்தமனே, வாரும் ஐயா கழுத்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய் நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க தாமதமேன் தயை புரிய தற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையை உலக மெங்கும் வளர்த்திடுவாய் பந்தமறப் பரிகரித்தே பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும் 5. ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும் 6. பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும் தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்