Varum Naam Ellarum Koodi

தமிழ்

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் --- வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் --- வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் --- வாரும் 4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே - இந்த மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் --- வாரும் 5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே - அவர் பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் --- வாரும்