Vazhththugiren yesu raja

தமிழ்

வாழ்த்துகிறேன் இயேசு ராஜா வாழ்த்துகிறேன் இக்காலையிலே அற்புதமாய் இரா முழுவதும் அடியேனைக் காத்தீரே உமது சேட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுவதும் உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் – வாழ்த்துகிறேன் நித்திரையை இன்பமாக்கிப் பத்திரமாய் இருதயத்தைச் சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருக்கிறீர் – வாழ்த்துகிறேன் பலவிதமாம் சோதனைகள் எமைச்சூழ வந்திருக்கும் ஒன்றும் எமை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் – வாழ்த்துகிறேன் சந்திப்பீரே இக்காளைதனில் தந்திடவே திருவரங்கள் சந்தோஷமாய்ப் பகல் முழுவதும் ஆவிக்குள் யான் பிழைக்க – வாழ்த்துகிறேன் தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புதுநாளில் நடத்திடுவீர் ஆவியினால் உமது திருசித்தமதில் – வாழ்த்துகிறேன் பாவமொன்றும் அணுகிடாமல் பைசுத்தமாய்ப் பாதை செல்லத் தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் – வாழ்த்துகிறேன் படைக்கிறேன் என் இருதயத்தைப் பலிபீடத்தில் முற்றுமாக கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக – வாழ்த்துகிறேன் செய்வேன் யான் எப்போதும் உம சித்தமே ஆசையுடன் ஒழித்திடுவேன் வீண் வார்த்தை பேசிடுவேன் உம் – வாழ்த்துகிறேன் என்னைக்கான்போர் உம்மைக்கான உம் சாயல் எனில் வேண்டும் தந்திடுவீர் தாழ்மையையும் பொறுமையுடன் அன்புமாக – வாழ்த்துகிறேன் நேசரே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும் ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும் – வாழ்த்துகிறேன்