தமிழ்
வாழ்த்துகிறேன் இயேசு ராஜா
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
அற்புதமாய் இரா முழுவதும்
அடியேனைக் காத்தீரே
உமது செட்டை நிழலதிலே
படுத்திருந்தேன் இரா முழுவதும்
உமது கரம் அணைத்திடவே
ஆறுதலாம் நித்திரையும் - வாழ்த்து
நித்திரையை இன்பமாக்கிப்
பத்திரமாய் இருதயத்தைச்
சுத்தமான இரத்தத்திற்குள்
சுத்தமாக வைத்திருந்தீர் - வாழ்த்து
பலவிதம் சோதனைகள்
எமைச் சூழ வந்திருந்தும்
ஒன்றும் எனை அணுகாமல்
அன்புடனே பாதுகாத்தீர் - வாழ்த்து
சந்திப்பீர் இக்காலைதனில்
தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய்ப் பகல் முழுவதும்
ஆவிக்குள் யான் பிழைக்க
தந்திடுவீர் அபிஷேகம்
புதிதாக இப்புவி நாளில்
நடத்திடுவீர் ஆவியினால்
உமது திருசித்தமதில்
பாவமேதும் அணுகாமல்
பரிசுத்தமாய் பாதை செல்ல
தேவையான சரிவாயுதங்கள்
தாரும் ஜெப ஆவியுடன்
படைக்கிறேன் என் இருதயத்தை
பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு
வாயும் கையும் காலுமாக
நேசரே உம் திருவருகை
இந்நாளில் இருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே
ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும்