Veru Jenmam Venum

தமிழ்

வேறு ஜென்மம் வேணும், – மனம் மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். 1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின் தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு 2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத் தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு 3. மானிடரின் அபிமானத்தினாலல்ல, வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு 4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி, மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு 5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே, சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு 6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும், விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு