Vyathiyashar Maalaiyil

தமிழ்

வியாதியஸ்தர் மாலையில் அவஸ்தையோடு வந்தனர்; தயாபரா உம்மண்டையில் சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய் இப்போதும் பாதம் அண்டினோம் பிரசன்னமாகித் தயவாய் கண்ணோக்குவீரென்றறிவோம் 3.விசாரம் சஞ்சலத்தினால் அநேகர் கிலேசப்பட்டனர்; மெய்பக்தி அன்பின் குறைவால் அநேகர் சோர்வடைந்தனர். 4.உலகம் வீண் என்றறிந்தும் பற்றாசை பலர் கொண்டாரே; உற்றாரால் பலர் நொந்தாலும் மெய்நேசர் உம்மைத்தேடாரே. 5.மாசற்ற தூய தன்மையை பூரணமாய்ப் பெறாமையால் எல்லோரும் சால துக்கத்தை அடைந்தோம் பாவப் பாசத்தால். 6.ஆ கிறிஸ்துவே மன்னுருவாய் மா துன்பம் நீரும் அடைந்தீர்; எப்பாடும் பாவமும் அன்பாய் ஆராய்ந்து பார்த்து அறிவீர். 7.உம் வார்த்தை இன்றும் பலிக்கும்; நீர் தொட்டால் சொஸ்தம் ஆவோமே ஆரோக்கியம் எல்லாருக்கும் இம்மாலை தாரும் இயேசுவே.