தமிழ்
யாரை நான் புகழுவேன்
யாரை நான் அறிகிறேன் ?
என் கதியும் பங்கும் யார்
நான் பாராட்டும் மேன்மை யார்?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
2. யார் நான் நிற்கும் கன்மலை
யார் என் திட நம்பிக்கை ?
குற்றத்தை சுமந்தோர் யார்
தெய்வ நேசம் தந்தோர் யார் ?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார்
ஆத்துமத்தின் சாரம் யார் ?
யாரால் பாவி நீதிமான்
யாரால் தெய்வ பிள்ளை நான்?
தெய்வ ஆட்டுக்குட்டியால் .
4. கஸ்தியில் சகாயர் யார்
சாவின் சாவு ஆனோர் யார் ?
என்னை தூதர் கூட்டத்தில்
சேர்ப்போர் யார் நான் சாகையில்?
தெய்வ ஆட்டுக்குட்டி தான்.
5. இயேசு தான் என் ஞானமே
அவர் என் சங்கீதமே :
நீங்களும் புகழுங்கள்
அவரைப் பின் செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை .