Yaarilum Melana Anbar

தமிழ்

யாரிலும் மேலான அன்பர் மா நேசரே; தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர் மா நேசரே; மற்ற நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார் மா நேசரே! 2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார மா நேசரே; பற்றிக்கொண்ட என்னை விடார் மா நேசரே! இன்றும் என்றும் பாதுகாப்பார் பற்றினோரை மீட்டுக்கொள்வார் துன்ப நாளில் தேற்றல் செய்வார் மா நேசரே! 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு மா நேசரை; என்றுமே விடாமல் எண்ணு மா நேசரை; எந்தத் துன்பம் வந்தும் நில்லு; நேரே மோட்ச பாதைச் செல்லு இயேசுவாலே யாவும் வெல்லு மா நேசரே! 4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம் மாநேசரே சோர்வுற்றாலும் வீரங் கொள்வோம் மா நேசரே கொண்ட நோக்கம் சித்தி செய்வார் நம்மை அவர் சேர்த்துக்கொள்வார்