Yen Aavi Aanma Thegamum

தமிழ்

என் ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன்; என்றும் உம் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன். 2.ஆ இயேசு வல்ல ரட்சகா உம் நாமம் நம்புவேன்; ரட்சிப்பீர் மா தயாபரா உம் வாக்கை வேண்டுவேன். 3.எப்பாவம் நீங்க உறுப்பு தந்தேன் சமூலமாய்; போராட்டம் வெற்றி சிறப்பு படைக்கலங்களாய். 4.நான் உம்மில் ஜீவித்தல் மகா மேலான பாக்கியம்; தெய்வ சுதா என் ரட்சகா என் ஜீவனாயிரும். 5.என் நாதா திரு ரத்தத்தால் சுத்தாங்கம் சொந்தமே; ஆனேன்! உம் தூய ஆவியால் பலி நான் உமக்கே.