Yen Karthave Ummilthan

தமிழ்

என் கர்த்தாவே உம்மில் தான் முழு நெஞ்சத்தாலே நான் வாஞ்சை கொண்டு நித்தமும் லோக வாழ்வை அற்பமும் குப்பையும் என்றெண்ணுவேன் உம்மையே சிநேகிப்பேன். 2.லோகத்தாரின் களிப்பு துக்கங்கொண்ட நெஞ்சுக்கு சஞ்சலத்தையன்றியே தேற்றத்தை உண்டாக்காதே; உம்மையே சிநேகிப்பேன் அதால் பாக்கியம் அடைவேன். 3.தேவரீரில் வாழ்வெல்லாம் பூர்த்தியாகவே உண்டாம்; உம்மில் வாஞ்சை கொள்வோனாய் உண்மையான நேசனாய் சேர்வோனுக்குத் தேவரீர் அந்த வாழ்வைக் கொடுப்பீர். 4.ஆறுதலும் பூரிப்பும் ஜீவனும் மகிழ்ச்சியும் உம்மால்தானே என்றைக்கும் குறைவின்றிக் கிடைக்கும்; நீரே அன்பின் காரணர்; கருணைத் தயாபரர்.