Yen Manathu Thudikkuthu

தமிழ்

என் மனது துடிக்குது குலைபதைத்து நோகும் தேவமைந்தனின் உடல் கல்லறைக்குப் போகும். 2.ஆ அவரே மரத்திலே அறையப் பட்டிறந்தார் கர்த்தர் தாமே பாவியின் சாவத்தைச் சுமந்தார். 3.என் பாவத்தால் என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும்; ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும். 4.என் ஆண்டவர் என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கின்றார் என் ரட்சிப்புக்காக. 5.வெட்டுண்டோரே ஆ உம்மையே பணிந்தேன் ஆவிபேணும் ஆகிலும் என் நிமித்தம் நான் புலம்பவேண்டும். 6.குற்றமில்லா மகா கர்த்தா உமது ரத்தம் ஊறும்; மனந்தாபமின்றி யார் அதைப் பார்க்கக் கூடும். 7.ஆ இயேசுவே என் ஜீவனே நீர் கல்லறைக்குள்ளாக வைக்கப்பட்டதைத் தினம் நான் சிந்திப்பேனாக. 8.நான் மிகவும் எந்நேரமும் என் மரணநாள் மட்டும் என் கதியாம் இயேசுவே உம்மை வாஞ்சிக்கட்டும்.