Yesu Devanai Thuthiduvom

தமிழ்

இயேசு தேவனை துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம் போங்க நன்றியுடனே போற்றி உயர்த்தி பணிந்திடுவோம் வார்த்தை வடிவாய் வந்தவரை வாதைப் பிணியை தீர்த்தவரை கண்ணின் மணிபோல் காத்த தயவை கருணை உருவைத் துதித்திடுவோம் அடிமை ரூபம் எடுத்தவரை அகிலம் பணிந்திடவே செய்தவரை உயர்ந்த நாமம் பெற்று விளங்கும் உன்னதர் அவரைப் போற்றிடுவோம் இருளை நீக்கும் மாஜோதியாய் உலகில் வந்த அருள் வடிவை ஜீவ ஒளியாய் திகழும் அவரை இன்றும் என்றும் துதித்திடுவோம் - இயேசு தேவத்தன்மையை வெளிப்படுத்த தேவ மைந்தனாய் வந்தவரை தேவ சுதராய் நாமும் விளங்க கிருபை உருவைத் துதித்திடுவோம் பாவ சாப மரணத்தை ஜெயித்து வென்று எழுந்தவரை மகிமை சூழ திரும்பி வந்திடும் வேந்தன் அவரைத் துதித்திடுவோம் - இயேசு