Yesu Manidanaai Piranthar

தமிழ்

இயேசு மானிடனாய்ப் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் இந்த நற்செய்தி சாற்றிடுவோம் மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள் மந்தையாய் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி தேவனை துதித்தனரே – இயேசு ஆலொசனைக் கர்த்தரே இவர் அற்புத மானவரே விண் சமாதான பிரபு சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு யாக்கோபில் ஒர் நட்சத்திரம் - இவர் வாக்கு மாறாதவரே கண் இமை நேரத்தில் நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளை போளமும் காணிக்கையே சாட்சியாய் கொண்டு சென்று - வான சாஸ்திரிகள் பணிந்தனரே மாட்டுத்தொழுவத்திலே – பரன் முன்னிலையில் பிறந்தார் தாழ்மையை பின் பற்றுவோம் – அவர் ஏழையின் பாதையிலே – இயேசு அன்னாளும் ஆலயத்தில் - அன்று ஆண்டவரை அறிந்தே தீர்க்கதரிசனமே -கூறி தூயனைப் புகழ்ந்தனரே