Yesu Naatha Kaakkireer

தமிழ்

இயேசு நாதா! காக்கிறீர் இளைப்பாறச் செய்கிறீர் மோசம் நேரிடாமலும் பாதம் இடறாமலும் என்னைத் தாங்கி நிற்கிறீர் ; நேச நாதா காக்கிறீர். 2.வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் சூறைக்காற்று மோதினும் ஆழி கோஷ்டமாயினும் அமைதல் உண்டாக்குவீர் ! நேச நாதா காக்கிறீர் ! 3.சற்று தூரம் செல்லவே மோட்ச கரை தோன்றுமே ! துன்பம் நீங்கி வாழுவேன் ; இன்பம் பெற்று போற்றுவேன் ; அதுமட்டும் தாங்குவீர் ; நேச நாதா காக்கிறீர் .