Yesu kiristhuvin thiru raththamae

தமிழ்

இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (2) இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம் எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2) 1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2) பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2) தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 2. ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே உறவாட செய்திடும் திரு ரத்தமே (2) சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2) சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (2) அளிக்க வந்தவன் தொடாதபடி (2) காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் 4.புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (2) நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2) நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே – என்னை (2) -இயேசுவின் ரத்தம்