Yesuve Neerthaame Yen

தமிழ்

இயேசுவே நீர்தாமே என் மகிழ்ச்சியாமே நீர் என் பூரிப்பு; என் மனம் நாள்தோறும் ஆசை வாஞ்சையோடும் ஏங்குகின்றது. கர்த்தரே உலகிலே உம்மை யன்றி வாழ்விராது இன்பமுங் காணாது. 2.நல் மறைவின் கீழே நான் ஒதுங்க நீரே என் அரண்மனை; சாத்தான் வர்மிக்கட்டும் எதிரி சீறட்டும் இயேசு என் துணை. திகிலும் பயங்களும் பாவ நரகக்கெடியும் இயேசுவால் தணியும். 3.வலு சர்ப்பத்துக்கும் சாவின் பற்களுக்கும் நான் திடுக்கிடேன். லோகமே விரோதி; நான் சங்கீதம் ஓதி தோத்திரிக்கிறேன். தெய்வக்கை என் சலுகை; இனி சாத்தான் கூட்டத்தார்கள் மௌனம் அடைவார்கள். 4.பொக்கிஷங்கள் யாவும் வீணும் விருதாவும்; இயேசு என் கதி லோகத்தார் இச்சிக்கும் வாழ்வோர் குமிழிக்கும் கானற்குஞ்சரி அதை ஏன் தொடருவேன் இயேசுவோடடைந்த தாழ்வு பெரிதான வாழ்வு. 5.லோகத்தின் மினுக்கே நீ மகா அழுக்கே. என்னைவிட்டுப் போ; பாவங்களுடைய தீழ்ப்பே நீ மறைய வேளையாம்; இதோ இச்சையே துன்மார்க்கமே நீ எல்லாஞ் சமூலமாக அற்றுப் போவாயாக. 6.மனமே நீ ஆறு பூரிப்பாகப் பாடு. இயேசு சேர்ந்தாரே; அத்தால் எந்தப் பாடும் தித்திப்பாக மாறும். நான் உலகிலே நிந்தையும் நிஷ்டூரமும் உத்தரித்தும் இயேசுதாவே என் மகிழ்ச்சியாமே.