Yesuvin Namame Thirunamam

தமிழ்

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின் 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின் 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது சத்திய விதேய மனமொத்த நாமம் – இயேசுவின் 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- கடி கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் – இயேசுவின் 5. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும் பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்