Yesuvin namamey

தமிழ்

இயேசுவின் நாமமே! கிறிஸ்து - இயேசுவின் நாமமே! வானம் பூமிதனில் மகிமையோடிலங்கும் - உன்னதர் நாமமே! அல்லேலூயா (4) அல்லேலூயா (4) மாந்தர் போற்றும் நாமம் - விண்-- தூதர் வாழ்த்தும் நாமம் பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம் - இயேசுவின் பாவம் போக்கும் நாமம் - தூய வாழ்வளிக்கும் நாமம் நித்திய ஜீவனருளும் ஈடில்லாத நாமம் - இயேசுவின் பேய் நடுங்கும் நாமம் - கடும் நோய் அகற்றும் நாமம் : நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம் - இயேசுவின்